சோமாலியாவில் இஸ்லாமியவாதிகளின் தாக்குதலில் மூவர் பலி

  • 2 ஜூலை 2016

தென்-மேற்கு சோமாலிய அதிகாரிகள் இஸ்லாமியவாதிகளின் தாக்குதலில் பிராந்தியத் தலைநகரான பைதோவாவில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

அல் -ஷபாப் தீவிரவாதிகள் மோட்டார் குண்டுகளை சுட்டதில் அதிபர் மாளிகை மாற்றும் விமான நிலையம் அருகில் குறிப்பிடத்தக்க அளவில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.

அந்த பகுதிகளில் இருந்து வரும் செய்திகள், அல் ஷபாப் எத்தியோப்பிய எல்லைக்கு அருகில் ராப்துரே என்ற பகுதியை பிடித்துவிட்டதாக தெரிவிக்கின்றன.