பிரிட்டன் பிரதமர் பதவி பெண் வேட்பாளர்கள் மத்தியில் ஐரோப்பா குறித்த முரண்பாடு

பிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இரு பெண் வேட்பாளர்களும், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கு வெவ்வேறு முரண்பட்ட கால வரையறைகளை முன்வைத்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

பிரதமர் பதவிக்கு போட்டியிடும் ஐந்து வேட்பாளர்களில் முன்னிலையில் இருக்கும் தெரேசா மே, பிரிட்டன் வெளியேறுவதற்கு முறையான நடைமுறைகளை அவர் தொடங்குவற்கு முன்பு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடனான எதிர்கால உறவு குறித்து தெளிவான பேச்சுவார்த்தை நிலைப்பாடுகளை கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அவரின் போட்டியாளர் ஆண்டிரியா லெட்சம், பொருளாதார நிச்சயமற்ற தன்மையை அகற்ற எவ்வளவு சீக்கிரம் பிரிட்டன் வெளியேற முடியுமா அவ்வளவு சீக்கிரம் வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னணி ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விரைவாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.