யூரோ 2016 போட்டிகள் மீது பந்தயம் கட்டிய சூதாட்டக் குழுவினர் சீனாவில் கைது

  • 3 ஜூலை 2016

பிரான்ஸில் நடைபெற்று வரும் யூரோ 2016 கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் மீது பந்தயம் கட்டிய இணைய வழி சூதாட்ட வலயக் குழு உறுப்பினர்களை சீனக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கோப்பு படம்

கடந்த மாதத்தில் யூரோ 2016 கால்பந்து சாம்பியன்ஷிப் தொடங்கியதிலிருந்து, நான்கு தென் சீன பிராந்தியங்களிலிருந்து 230-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக நடந்த சோதனைகளின் போது, 4 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான சொத்துக்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

சீனாவில் இணைய வழி சூதாட்டம் சட்டவிரோதமானது. ஆனால், அண்மை வருடங்களில் இணைய வழி சூதாட்டத்தின் மீதான அபிமானம் அந்நாட்டில் அதிகரித்துள்ளது.