சீனாவில் கழிவு எரிப்பு உலைக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டம்

தெற்கு சீனாவின் விவசாய நகரம் ஒன்றில், கழிவுப் பொருட்களை எரிக்கும் உலை ஒன்று கட்டப்படுவதற்கு எதிராக பொது மக்கள் அசாதாரணமான பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

படத்தின் காப்புரிமை BBC CHINESE / ANNONUMOUS USER

குவாங்டாங் மாகாணத்தில் லுபு நகர வாசிகள், உள்ளூர் அரசு அலுவலகத்தின் வெளியே ஒன்று கூடி அந்த கழிவு எரிப்பு உலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

டிவிட்டரில் வெளியான அப்பகுதியின் புகைப்படத்தில், மக்கள் சாலை முழுவதும் உள்ளது போலவும், டஜன் கணக்கில் கலவர தடுப்பு போலிஸார் அவர்களின் அருகில் அணிவகுத்து செல்வது போலவும் தெரிகிறது. மேலும் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பரிசீலிக்கப்பட்டு வருவதாக உள்ளூர்வாசி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

அப்பகுதியின் முக்கிய நீர் ஆதாராமான ஷி நதியின் மேல் இந்த கழிவு எரிப்பு உலை கட்டப்படபோவதாக திட்டமிடப்பட்டிருந்தது.