இராக்: இரட்டை குண்டு தாக்குதல்களில் குறைந்தது 79 பேர் பலி

  • 3 ஜூலை 2016

இராக்கின் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்டுள்ள இரட்டை குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 79 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 130க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption இவ்வாண்டில் மிக மோசமான தாக்குதலாக கருதப்படும் இரட்டை தாக்குதல்களில் குறைந்தது 79 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

காராடா மாவட்டத்தின் மத்தியில் ஒரு உணவகத்திற்கு முன்னர் நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத் தாக்குதலுக்கு பின்னணியில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினர் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption ஃபலூஜா நகரை இராக் அரசு படைகள் கைபற்றிய ஒரு வாரத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது

அதற்கு பின்னர், பாக்தாத்தின் வடக்கில் நிகழ்ந்த இரண்டாவது குண்டு தாக்குதலில், நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டில் நடைபெற்றிருக்கும் மிகக் கொடிய தாக்குதலான இவை இரண்டும், இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஃபலூஜா நகரை இராக் பாதுகாப்புப் படைகள் மீண்டும் கைபற்றிய ஒரு வாரத்திற்கு பிறகு நடைபெற்றுள்ளன.