ஸ்காட்லாந்தில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த பிரஜைகள் குறித்து நிக்கோலா ஸ்டர்ஜன் கடிதம்

  • 3 ஜூலை 2016
படத்தின் காப்புரிமை Reuters

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகிய பிறகும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த பிரஜைகள் ஸ்காட்லாந்தில் தொடர்ந்து வாழ அனுமதிக்கும்படி பிரிட்டிஷ் அரசு உத்திரவாதம் வழங்குமாறு ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் மற்றும் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் ஐந்து கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களுக்கும் ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் கடிதம் மூலம் இக்கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த 1,73,000 பேர் ஸ்காட்லாந்தில் வசிப்பதை பிரிட்டிஷ் அரசாங்கம் மதிப்பது அவசியம் என்று நிக்கோலா ஸ்டர்ஜன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஸ்காட்லாந்து இணைந்திருக்க சாத்தியப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக நிக்கோலா ஸ்டர்ஜன் கூறியுள்ளார்.