சிரியாவில் போராளிகள் குழுவின் தலைவரை கடத்திய அல் நூஸ்ரா முன்னணியினர்

  • 3 ஜூலை 2016

தனது அமைப்பின் தலைவர் உட்பட 40 உறுப்பினர்களை அல் கயீதா தொடர்புடைய அல் நுஸ்ரா முன்னணியினர் கடத்தி உள்ளதாக மேற்குலக ஆதரவு பெற்ற போராளிகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

வட சிரியாவில் பல்வேறு பகுதிகளில் இந்த கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றதாக ஜெய்ஷ் அல்-தஹ்ரிர் கூறியுள்ளது.

ஜெய்ஷ் அல்-தஹ்ரிர் அமைப்பின் தலைவர் முகமது அல்-காபி, தன்னுடைய தந்தையின் வீட்டில் இருந்த போது, அல்-நுஸ்ரா முன்னணி போராளிகளால் கடத்தப்பட்டதாக ஜெய்ஷ் அல்-தஹ்ரிர் கூறியுள்ளது.

இச்சூழலில், கைதிகளை விடுவிக்க கடத்தல்காரர்களுக்கு அழுத்தம் தரும் விதமாக மற்ற இஸ்லாமியவாத குழுக்களுக்கு ஜெய்ஷ் அல்-தஹ்ரிர் அழைப்பு விடுத்துள்ளது.