டாக்கா தாக்குதலில் வங்கதேச அரசியல் தலைவரின் மகனுக்கு தொடர்பு

வங்தேசத்தின் ஆளும் கட்சியை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர், வங்கதேச தலைநகர் டாக்காவில், கடந்த வெள்ளியன்று தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரிகளில் அவரின் மகனும் ஒருவர் என்று தெரியவந்ததிற்கு பிறகு அவரின் துயரம் மற்றும் அவமானம் குறித்து பேசியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AP

பிபிசியிடம் பேசிய வங்கதேச அரசியல் தலைவர் இமிதியாஸ் கான், தனது மகன் ரோஹன் ஆறு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அப்போதிலிருந்து அவன் தங்களை தொடர்பு கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பு, அவனது புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டு தாங்கள் தாக்குதலை நடத்தியதாக தெரிவித்திருந்தனர். அந்த தாக்குதலில், பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட 20 வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.

பிணைக்கைதிகளை பிடித்து வைத்தவர்களில், ஐந்து பேர் வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், அதில் சிலர் தனியார் மற்றும் வெளிநாட்டு பல்கலைகழகங்களில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.