ஐக்கிய ராஜ்ய சுதந்திரக் கட்சியின் தலைவர், நைஜல் ஃபராஜ் பதவி விலகல்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் வாக்காளர்களின் முடிவுக்கு வர முக்கிய பங்காற்றிய பிரிட்டிஷ் கட்சியின் தலைவர் ஆச்சரியப்படும் வகையில் தன்னுடைய பதவியிலிருந்து விலகியுள்ளார்.

Image caption என்னுடைய பங்கை ஆற்றியுள்ளேன். பதவி விலக இதுவே தருணம் - நைஜல் ஃபராஜ்

தன்னுடைய பங்கை அவர் ஆற்றியுள்ளதாகவும், பதவி விலகுவதற்கு இதுவே தருணம் என்றும் ஐக்கிய ராஜ்ய சுதந்திரக்கட்சி தலைவர் நைஜல் ஃபராஜ் கூறியிருக்கிறார்.

குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதிலிருந்து பின்வாங்காமல் இருப்பதை உறுதி செய்ய அரசின் மீது அழுத்தங்களை தொடர்வது முக்கியமானது என்று ஃபராஜ் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும்போது சிறந்த உடன்பாடு ஏற்படுவதற்கு பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியே கொண்டு வருவதற்கு வைத்திருந்த நீண்டகால இலக்கு நிறைவேறியுள்ளதால், அவர் தன்னுடைய வாழ்க்கைக்கு திரும்ப விரும்புவதாகவும் கூறியிருக்கிறார்.