ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கென்யாவில் பெருகிவரும் ஒட்டகப்பால் பண்ணைகள்

சிரமமான காலங்களின்போது வணிக வாய்ப்புகள் எதிர்பாராத இடங்களில் இருந்துகூட உருவாகக்கூடும்.

வறட்சி காரணமாக மேற்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்க பகுதிகளில் பயிர்களும் கால்நடைகளும் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றன.

ஆனால், வடக்கு கென்யாவில் உலர்வான காலநிலை, அங்கு ஒட்டகப்பாலின் வணிக வாய்ப்பை அதிகரித்துள்ளது.

மாடுகளைப் போல் அல்லாது ஒட்டங்கள் பத்து நாட்களுக்கு தண்ணீர் இல்லாமலேயே பால் கறக்கக்கூடியவை.

அவை தான் அங்கே பயணாளிகளுக்கு பாலும், பராமரிப்பாளர்களுக்கு பணமும் தரத்துவங்கியுள்ளன.

கென்யாவில் பெருகிவரும் ஒட்டகப்பால் பண்ணைகள் குறித்த பிபிசியின் பிரத்தியேகக் காணொளி.