சீன முன்னாள் அதிபரின் மூத்த உதவியாளருக்கு ஆயுள் தண்டனை

சீனாவின் முன்னாள் அதிபர் ஹு ஜிண்டாவின் முன்னாள் மூத்த உதவியாளர் லிங் ஜிஹுவா ஊழல் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை

அரசு ரகசியங்களை வெளியிட்டதற்கான குற்றத்திற்காகவும் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தக் குற்றத்திற்காகவும் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு, அதிபர் ஹூவின் தலைமை அலுவலர் பணியில் மிகுந்த அதிகாரமுடையவராக அவர் இருந்தார்.

ஆனால், 2012ம் ஆண்டில் பெய்ஜிங்கில், ஃபெராரி காரை ஓட்டிச் சென்று, விபத்தில் சிக்கி அவரின் மகன் உயிரழந்த செய்திக்கு பிறகு அவரின் அரசியல் வாழ்க்கை முடங்கியது.

அதிக வேகத்தால் ஏற்பட்ட அந்த விபத்தை மூடிமறைக்க லிங் முயற்சி செய்தார் எனவும் கருதப்படுகிறது.