டச்சே போயர்ஸ் நிறுவனத்தோடு இணைவதற்கு லண்டன் பங்கு சந்தையின் பங்குதாரர்கள் ஆதரவு

தங்களுடைய ஜெர்மானிய போட்டியாளரான டச்சே போயர்ஸ் நிறுவனத்தோடு இணைவதற்கு லண்டன் பங்கு சந்தையிலுள்ள பங்குதாரர்கள் ஒட்டு மொத்தமாக வாக்களித்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption லண்டன் பங்கு சந்தையின் பங்குதாரர்கள் ஜெர்மானிய டச்சே போயர்ஸ் நிறுவனத்தோடு இணைய இசைவு

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகப் பிரிட்டன் வாக்களித்திருப்பதால் உருவாக்கப்பட்ட நிச்சயமற்ற சூழ்நிலையிலும், தங்களின் 26 பில்லியன் (2600 கோடி) அமெரிக்க டாலர் உடன்பாடு தொடர வேண்டும் என்று இரு நிறுவனங்களும் வலியுறுத்துகின்றன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption இந்த இணைப்பு, உலகிலேயே மிக பெரிய பங்கு சந்தை நிறுவனங்களில் ஒன்றை உருவாக்கும்

டச்சே போயர்ஸ் நிறுவனப் பங்குதாரர்கள் அடுத்த வாரம் வாக்களிக்க இருக்கும் இந்த முன்னகர்வு, உலகிலேயே மிக பெரிய பங்கு சந்தை நிறுவனங்களில் ஒன்றை உருவாக்கும்.

இது லண்டன், மிலான், பிராங்ஃபோர்ட் பங்குசந்தைகளையும், பிற நிதி வர்த்தகங்களையும் கட்டுப்படுத்தும்.