புகுஷிமா விபத்து: 5 ஆண்டுகளுக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்பும் பசிஃபிக்

ஜப்பானின், ஃபுகுஷிமா அணு உலையில் விபத்து நடந்து ஐந்து வருடங்களுக்கு பிறகு, பசிஃபிக் பெருங்கடலில் கதிரியக்க அளவு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

படத்தின் காப்புரிமை Reuters

இந்த விபத்திற்கு பிறகு, ஜப்பான் கடற்கரைகளில் கதிரியக்க அளவு இயல்பை விட பல மிலியன் மடங்கு அதிகரித்திருந்தது; கதிர் இயக்கத் துகள்கள் அமெரிக்கா வரை பரவி இருந்தன.

ஆனால் பசிஃபிக் பெருங்கடலின் அளவு, இந்த கதிர்வீச்சு மாசைக் கலைந்து நீர்த்து போக செய்தது.

இந்த விபத்து, ஃபுகுஷிமாவில் உள்ள கடற்கரை அணுமின் நிலையம், பெருத்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியால் கடல் நீரால் சூழப்பட்ட போது ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.