பாக்தாத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இராக் மக்கள் அஞ்சலி

  • 4 ஜூலை 2016

பாக்தாத்தில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறைந்தது 165 பேர் பலியாகக் காரணமாக இருந்த வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, பாக்தாத் நகர நுழைவாயில்களில் பாதுகாப்பினை அதிகரிப்பதில் உறுதியாக இருப்பதாக இராக் அரசு வாக்குறுதி அளித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption உயிரிழந்தவர்களை எண்ணி கண்ணீர் விடும் உறவினர்கள்

வெடிகுண்டுகளை கணிக்கத் தவறிய மதிப்பிழந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு சாதனங்கள் விரைவில் தடை செய்யப்படவுள்ளன.

இஸ்லாமிய அரசு அன்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பினால் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த, இராக் மக்கள் மூன்று நாட்கள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கின்றனர்.

இது போன்ற அட்டூழியங்களை தடுக்கத் தவறிய அரசின் மீது மக்களின் சினம் அதிகரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

அண்டை பகுதிகளில் ஷியா சமூக மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வணிகப் பகுதியில் நடந்துள்ள தாக்குதலினால் அதிர்ச்சியடைந்துள்ள நூற்றுக்கணக்கான மக்கள், சம்பவ இடத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

காவல் துறையினர் மற்றும் ராணுவத்தினர் இருந்த போதிலும், அப்பகுதியில் பாதுகாப்பு இல்லையென்றும், தங்களின் தோல்விகளுக்கு அரசியல்வாதிகள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் வேண்டுமென்றும் அப்பகுதிவாசி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.