கருத்தறியும் வாக்கெடுப்பு: அயர்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து இடையே பேச்சுவார்த்தை

பிரிட்டன் , ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற முடிவின் விளைவுகள் அயர்லாந்து பிரதமர் மற்றும் வடக்கு அயர்லாந்தின் தலைவர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் பெரிதாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன.

டப்ளினில் நடைபெற்ற வட அயர்லாந்து மற்றும் அயர்லாந்து அமைச்சர்களின் கூட்டத்திற்கு பிறகு அயர்லாந்தின் பிரதமர் எண்டா கென்னடி, இது குறித்து ஒரு பத்து அம்சத் திட்டம் ஒன்றிற்கு தாங்கள் உடன்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வட அயர்லாந்தின் வாக்காளர்கள், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என வாக்களித்ததாகவும் அதில் பெரும்பாலானோர், வெளியேறுவது அமைதி நடைமுறைகளை கடினமாக்கும் என கவலை தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு, தனது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி நாடான பிரிட்டன் வெளியேறினால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என அயர்லாந்து அரசு கவலை தெரிவித்துள்ளது.