ஸ்பெயின் ஏழு கால்பந்து கிளப்புகள் மில்லியன் கணக்கான டாலர்களை திரும்ப வழங்க உத்தரவு

  • 4 ஜூலை 2016
படத்தின் காப்புரிமை AFP
Image caption மில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்களை திரும்ப வழங்க ஏழு ஸ்பெயின் கால்பந்து கிளப்புகளுக்கு உத்தரவு

ஸ்பெயினிலுள்ள ஏழு முன்னிலை கால்பந்து கிளப்புகள் , மில்லியன் கணக்கான அமெரிக்க டாலர் அரசின் உதவி அல்லது ஆதரவை திரும்ப செலுத்த வேண்டுமென ஆணையிடப்பட்டுள்ளது.

வரி மற்றும் சொத்துக்களில் சலுகைக் கடன்கள் மற்றும் உடன்பாடுகளால் அரசிடமிருந்து உதவிகளை பெற்று பயனடைந்துள்ளதன் மூலம் அவை ஐரோப்பிய சட்டங்களை மீறியுள்ளதாக ஐரோப்பிய ஆணயைம் முடிவு செய்துள்ளது.

ஸ்பெயினின் தலைநகரில் சொத்து விவகாரம் தொடர்பான ஒரு வழங்கில், உலகிலேயே மிகப் பணக்கார கிளப்பான ரியல் மாட்ரிட் 20 மில்லியன் (2 கோடி) அமெரிக்க டாலர்கள் திரும்ப செலுத்த வேண்டுமென ஆணையிடப்பட்டது.

வரி செலுத்துவோரின் பணத்தை தங்களுக்கே நிதி ஆதரவு அளிப்பதற்கு இந்த அணிகள் அநியாயமாக பயன்படுத்தியுள்ளன என்று ஐரோப்பிய போட்டி ஆணையாளர் மார்கிரெட்டே வெஸ்டாகர் தெரிவித்திருக்கிறார்.

வேறொரு புலனாய்வில், பிஎஸ்வி இந்தோவன் மற்றும் பிற நான்கு டச்சு கால்பந்து கிளப்புகள் நியாயமற்ற நிதி ஆதரவு பெற்றிருப்பதை ஐரோப்பிய ஆணையம் அறிய வந்துள்ளது.