சிரியா: மேன்பிஜ் நகரில் மோதல்கள் அதிகரிப்பு

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் மேன்பிஜ் நகரப் பகுதியில் அதிக மோதல்கள் நடைபெற்றிருப்பதாக சிரியாவின் வடக்கிலிருந்து வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption இஸ்லாமிய அரசு தீவிரவாதக் குழுவின் பிடியில் இருக்கும் சிரியாவின் மேன்பிஜி நகரில் மோதல்கள் அதிகரிப்பு

குர்து இனத்தவர் மற்றும் அரேபிய ஆயுதப் படையினர் இணைந்த படைப்பிரிவால் இந்த நகரம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

வார இறுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தியுள்ள திடீர் தாக்குதல் முயற்சிகள் இரண்டை முறியடித்துள்ளதாக இந்த படைப்பிரிவு கூறுகின்றது.

தற்போதைய சண்டைகளுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான குடிமக்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறியுள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

துருக்கியின் எல்லைக்கு அருகில் இருக்கும் மேன்பிஜ், தீவிரவாதிகளுக்கு பொருட்கள் செல்லுகின்ற முக்கிய விநியோகப் பாதையில் அமைந்துள்ளது.