பிரிட்டனில் அதிகரிக்கும் வெறுப்புணர்வு: ஆன்மிகத் தலைவர் வேதனை

ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்குப் பிறகு, பிரிட்டனில் விஷத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்தும் போக்கு பலமடங்கு அதிகரித்திருப்பதாக சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் ஆன்மிகத் தலைவர் ஜஸ்டின் வெல்பி தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty

சமூகத்தில் நிலவி வந்த அமைதி மற்றும் சகிப்புதன்மை தொடர்பான மெல்லிய ஓட்டின் மீது விரிசல் விழுந்திருப்பதாக ஆர்ச்பிஷப் வெல்பி தெரிவித்தார். இனவெறி மற்றும் பிற நாட்டவர் மீதான வெறுப்புணர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

உட்பூசல்களுக்கு பலியாகிவிடாமல் நல்லிணக்கத்தையும் அன்பையும் வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என பிரிட்டன் அரசியல்வாதிகளை அவர் எச்சரித்துள்ளார்