கருத்தறியும் வாக்கெடுப்புக்கு பிறகு பொருளாதாரச் சவால்கள் தெளிவாகியுள்ளன - இங்கிலாந்து வங்கி

  • 5 ஜூலை 2016

பொருளாதாரச் சவால்கள் என்று அது இனம் கண்டிருப்பவை, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் வாக்கெடுப்பின் விளைவாக தெள்ளத் தெளிவாகி இருப்பதாக பிரிட்டனின் மத்திய வங்கியான இங்கிலாந்து வங்கி தெரிவித்திருக்கிறது.

Image caption மககள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு பிறகு, பொருளாதாரப் பிரச்சினைகள் தெளிவாகியுள்ளன -இங்கிலாந்து வங்கி

ஐரோப்பிய ஒன்றியத்தோடும், உலகோடும் புதிய வர்த்தகத் தொடர்புகளை பிரிட்டன் நிறுவுவதற்கு நேரம் எடுக்கும். வெளிநாட்டு முதலீட்டை பராமரிப்பது கடினமாக இருக்கும் என்று அது தெரிவித்திருக்கிறது.

கடன்களை செலுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் அதிகச் சிரமங்களை சந்திப்பார்கள், வீடுகளின் விலை வீழ்ச்சியடைக்கூடும் என்றும் அது குறிப்பிடுகிறது.

ஆனால், வணிக வங்கிகள் நன்றாக முதலீடு பெற்றுள்ளன. எனவே வங்கிகளை மேலும் அதிக பணத்தை பாதுகாப்பாக ஒதுக்கை வைக்குமாறு மத்திய வங்கி நிர்ப்பந்திக்காது என்றும், வர்த்தகத்திற்கும் மக்களுக்கும் கடன் கொடுக்க அதிக வாய்ப்பு வழங்கும் என்றும் இங்கிலாந்து வங்கி தெரிவித்திருக்கிறது.