சீனாவில் வெள்ளப்பெருக்கு: நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி

சீனாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் பல நாட்களாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஏறத்தாழ 100 பேர் உயிரிழந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், லட்சக்கணக்கான மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த வெள்ளத்தால் பல வீடுகள் அழிந்துவிட்டன. சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

சீனாவின் பிரதமர் லி கெசியாங், மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாகாணங்களில் ஒன்றான அன்ஹு்ய்க்கு விஜயம் செய்தார்.

சீனாவின் பருவ மழைக் காலமாக உள்ளதால் மேலும் மழைப் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை கணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.