மதினா தாக்குதல்: இஸ்லாமிய நாடுகள் சீற்றம்

  • 5 ஜூலை 2016

சவுதி அரேபியாவின் புனித நகரான மதினாவில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய நாடுகளில் சீற்றத்தை உருவாக்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை
Image caption மதினாவில் நடத்தப்பட்ட தாக்குதல்

அந்த தாக்குதலில் நான்கு பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்லாத்தின் புனித தலங்களில் ஒன்றாக கருதப்படும் முகமது நபியின் மசூதிக்கு அருகாமையில் நடத்தப்பட்ட இந்த தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு சவுதி அரேபியா, எகிப்து மற்றும் இரான்

ஆகிய நாடுகளின் உயர் மத குருக்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

ஆப்கான் தாலிபான் இயக்கம் வெறுப்புணர்வால் நடத்தப்பட்ட குற்றம் இது என்று கூறியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு காரணம் யாரென்று உறுதியாக தெரியாத நிலையில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பின் மீது சந்தேகங்கள் எழுந்துள்ளன.