சவுதி அரேபியாவில் தொடர்ச்சியான குண்டுத்தாக்குதல்கள்

சவுதி அரேபியாவில் தொடர்ச்சியான குண்டுத்தாக்குதல்கள்

சவுதி அரேபியா எங்கிலும் தொடர்ச்சியான குண்டுத்தாக்குதல்கள் நடந்துள்ளன.

மூன்று வெவ்வேறு தாக்குதல்கள் நடந்துள்ளன. கரையோர நகரான கத்தீஃபில் உள்ள மசூதி முதலாவது இலக்காகும்.

ஜெட்டாவில் உள்ள அமெரிக்க துணைத்தூதரகத்துக்கு அருகே இரண்டாவது தாக்குதல் நடந்துள்ளது. அடுத்து மதினாவில் உள்ள முக்கிய மசூதியிலும் தாக்குதல் நடந்துள்ளது.

முஹமது நபி அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகில் உள்ள மசூதிக்கு வெளியே நடந்த தாக்குதலில், நான்கு சவுதி காவலர்கள் அங்கு கொல்லப்பட்டதுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.