இராக் மீதான டோனி பிளேரின் போர் நியாயமற்றது: சில்காட்

இராக் மீதான டோனி பிளேரின் போர் நியாயமற்றது: சில்காட்

சதாம் ஹுசைனிடம் இருந்து பிரிட்டனுக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லாத நிலையில், அமைதி வழிக்கான அனைத்து வழிகளையும் பயன்படுத்தி முடிக்காமலே பிரிட்டிஷ் அரசாங்கம் 2003 ஆம் ஆண்டில் இராக் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் இணைந்ததாக அந்த போரில் பிரிட்டனின் பங்களிப்பு குறித்த நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.

தவறான உளவுத்தகவல்களின் அடிப்படையில் இராக் மீது போர் தொடுக்கும் கொள்கைமுடிவு எடுக்கப்பட்டது தெளிவாகியுள்ளதாக சர் ஜான் சில்காட் தனது விசாரணையின் முடிவில் தெரிவித்துள்ளார்.

அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் தனது முக்கிய கூட்டாளிகளுக்கு தோள் கொடுக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே அமெரிக்காவுடன் சேர்ந்து இராக் மீது போருக்கு போனதாகவும் அந்த விசாரணை அறிக்கை கூறியுள்ளது.

பிரிட்டன் அரசியலில் முக்கிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் சில்காட் விசாரணை அறிக்கையின் முக்கிய அம்சங்களை விளக்கும் காணொளி.