சீனாவில் வெள்ளம்: ஊகான் நகரம் கடும் பாதிப்பு

  • 6 ஜூலை 2016

சீனாவில் ஏற்பட்ட கொடுமையான வெள்ளத்தால், யாங்ஸி நதிக்கரையில் அமைந்துள்ள ஊகான் நகரம் மோசமாக சீர்கேடு அடைந்துள்ளது.

படத்தின் காப்புரிமை

இந்நகரத்தில் 10 மில்லியன் (1 கோடி) மக்கள் வசித்து வருகிறார்கள். ஊகான் சாலைகளில் அதிகரித்து வரும் மழை நீரால், சாலைகள் முடக்கப்பட்டு , மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் எண்ணற்ற மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே வர முடியாமல் சிக்கியுள்ளனர்.

நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில், பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அவர்களின் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஏறக்குறைய 130 பேர் இந்த இயற்கை சீற்றத்தினால் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. பல டஜன் கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர்.

மீட்புப் பணிகளில் உதவிட, கூடுதல் படைகளை களத்தில் இறங்கிடுமாறு சீன அதிபர் ஷீ ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆண்டு சீனாவில் பெய்த கோடைக்கால பருவமழை, நாட்டின் சில பகுதிகளில், இது வரை இல்லாத அளவு மிக அதிக அளவினை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.