கென்யாவில் காவல் நிலையத்துக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவைப்பு

மனித உரிமைகள் வழக்கறிஞர் உள்பட மூன்று நபர்கள் சிறை வைக்கப்பட்டகாவல் நிலையத்தை, வில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை
Image caption கென்யாவில் வழக்கறிஞரின் மரணத்துக்கு எதிராக நாடெங்கும் வெடித்த போராட்டம்

இந்த மூன்று நபர்களும் பின்னர் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டனர்.

இந்த காவல் நிலையத்தை சேர்ந்த நான்கு காவல்துறை அதிகாரிகள் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மிகவும் மோசமாக தாக்கப்பட்ட வில்லி கிமானி, அவரது வாடிக்கையாளர் மற்றும் வாகன ஓட்டுனர் ஆகியோரின் உடல்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு நதியில் தூக்கி ஏறியப்பட்டது கண்டறியப்பட்டது.

இவர்கள் மூவரையும் ஒரு வார காலமாக காணவில்லை. காவல்துறையின் தவறான செயல்கள் குறித்து வெளிப்படையாக விமர்சிக்கும் தன்மை உள்ளவராக கிமானி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.