நிதிச்சந்தை கொந்தளிப்பு: பவுண்ட் மதிப்பில் தொடர்ந்து வீழ்ச்சி

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் விலகுவது என்று வாக்கெடுப்பில் முடிவு வந்ததைத் தொடர்ந்து நிதிச் சந்தைகளில் தொடர்ந்து கொந்தளிப்பு நிலவுகிறது.

படத்தின் காப்புரிமை Reuters

ஆசிய வர்த்தகத்தில், பிரிட்டிஷ் நாணயமான பவுண்டு 31 ஆண்டுகள் காணாத புதிய குறைந்த மதிப்பைத் தொட்டு, ஒரு டாலர் 28 செண்ட் என்ற அளவுக்குக் கீழ் விழுந்தது.

முதலீட்டாளர்கள் பொதுவாக பாதுகாப்பான முதலீடுகளாகக் கருதப்படும் அரசு கடன் பத்திரங்களுக்கு தங்கள் நிதியைத் திருப்பி விட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று பகுப்பாய்வாளர்கள் கூறுகிறார்கள்.

சில பிரிட்டிஷ் நிதி மேலாளர்கள் தாங்கள் நிர்வகிக்கும் சொத்து நிதித்திட்டங்களிலிருந்து முதலீட்டாளர்கள் பணத்தைத் திரும்ப எடுப்பதைத் தடுக்க எடுத்த முடிவை அடுத்தே இந்த சந்தை நகர்வுகள் வருகின்றன.

கருத்தறியும் வாக்கெடுப்பால் ஏற்பட்ட அதிக பட்ச நிச்சயமற்ற தன்மை முதலீட்டாளர்களை தங்கள் பணத்தைத் திரும்ப எடுக்க விரையச் செய்தது என்று அவர்கள் கூறுகிறார்கள்.