இன்று எத்தியோப்பியாவிற்கு பென்ஜமின் நேதன்யாஹு வருகை

தனது ஆப்ரிக்க சுற்றுப்பயணத்தின் கடைசி பகுதியாக, இன்று பின்னதாக எத்தியோப்பியாவிற்கு இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நேதன்யாஹு வரவுள்ளார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption பென்ஜமின் நேதன்யாஹு (கோப்பு படம்)

தனது ஆப்ரிக்க சுற்றுப்பயணத்தில் உகாண்டா, கென்யா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளுக்கு பென்ஜமின் நேதன்யாஹு சென்றுள்ளார்.

கடந்த 30 வருடங்களில், ஆப்ரிக்காவுக்கு வருகை புரிந்த முதல் இஸ்ரேலிய பிரதமர், பென்ஜமின் நேதன்யாஹு ஆவார்.

அடிஸ் அபாபாவில் நடக்கவுள்ள பேச்சுவார்த்தை, இஸ்ரேல் மற்றும் எத்தியோப்பியா இடையிலான வணிகப் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், எத்தியோப்பியாவில் வாழும் 9000 எத்தியோப்பிய யூதர்களின் எதிர்காலம் குறித்தும் கவனம் செலுத்தும்.

எத்தியோப்பியாவில் 1984-இல் ஏற்பட்ட பஞ்சத்தின் போதும், பின்னர் ஒரு நீண்ட உள்நாட்டு போரின் இறுதியில் 1991லும், ஆயிரக்கணக்கான எத்தியோப்பிய யூதர்களை அங்கிருந்து விமானம் மூலம் தன் நாட்டுக்கு இஸ்ரேல் அரசு அழைத்துச் சென்றது.