அலெப்போ நகரில் சிரியா படை - போராளிகள் இடையே கடும் மோதல்

போராளிகள் வசமுள்ள அலெப்போ நகரையும், வெளி உலகையும் இணைக்கும் ஒரே ஒரு சாலை வழி தடத்திற்கு மிக அருகில் கடுமையான சண்டை நடைபெற்று வருவதாக சிரியாவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஸ்டெல்லோ சாலை என்ற இடத்திலிருந்து, வான்வழித் தாக்குதல்களின் ஆதரவோடு, அரசப் படைகள் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குத்தான் முன்னேறியிருப்பதாகக் கூறப்புகிறது.

ஆனால், அதற்கு மேல் அரசப்படைகளால் முன்னேற முடியாது என கிளர்ச்சியாளர்களின் தளபதி ஒருவர் கூறியுள்ளார். அதே நேரத்தில், அரசப்படைகளை விரட்டியடிக்க பெரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

போராளி குழுக்களுக்கான அடிப்படை விநியோகங்கள் கொண்டு செல்லப்படும் சாலை நிரந்தரமாக துண்டிக்கப்பட்டால், அலெப்போ நகரை கைப்பற்றும் போரில் சிரியா அரசு சாதகமான நிலையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.