ரஷியா ஆக்கிரமிப்புகளை தடுக்க 4,000 நேட்டோ படையினரை நிறுத்த திட்ட ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி

  • 8 ஜூலை 2016

எஸ்தோனியா, லாத்வியா, லிதுவேனியா மற்றும் கிழக்கு போலந்து நாடுகளில் நான்காயிரம் நேட்டோ படைகளை நிறுத்துவதற்காக, ஐரோப்பிய நாடுகளுடன் ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று நேடோ அமைப்பின் பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டோலென்பெர்க் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

வார்சாவில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டிற்கு முன்னதாக கையெழுத்தாகி உள்ள இந்த ஒப்பந்தம், க்ரிமியாவை ரஷியா இணைத்துக் கொண்டதன் பிறகு கிழக்கு எல்லைகளில் ரஷியா ஆக்கிரமிப்புகளை தடுக்கும் நோக்கத்தில் போடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கிரைமியாவை ரஷ்யா தன்னோடு இணைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஒருங்கிணைந்த ஜெர்மன் அமைந்து கால் நூற்றாண்டுகளுக்கு மேலான நிலையில், ரஷியாவை தடுக்கும் நோக்கில் படையினர் நிறுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

ரஷியாவினால் அச்சுறுத்தல்கள் ஏற்படும் எனப் பேசுவது அபத்தமானது என்று கிரெம்ளின் மாளிகை பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.