சட்டவிரோத மீன்பிடியால் ஆண்டுக்கு 2300 கோடி டாலர் இழப்பு

சட்டவிரோத மீன்பிடியால் ஆண்டுக்கு 2300 கோடி டாலர் இழப்பு

உலக அளவில் சட்டவிரோத மீன்பிடி என்பது மிகப்பெரும் தொழிலாக நடக்கிறது.

உலக பொருளாதாரத்தில் ஆண்டுக்கு சுமார் 23 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படுத்துவதாக ஐநா மதிப்பிட்டிருக்கிறது.

உலகிலேயே மேற்கு ஆப்ரிக்க கடலில் தான் அதிகபட்ச சட்டவிரோத மீன்பிடி நடக்கிறது.

அதேசமயம் அந்த பிராந்தியத்தில் தான் உலகின் வறிய நாடுகளும் இருக்கின்றன.

இந்த நாடுகளிடம், சட்டவிரோத மீன்பிடியை எதிர்க்கத்தேவையான கட்டமைப்புக்கள் உரிய அளவு இல்லை.விளைவு அந்நாடுகளின் மீனவ சமூகங்கள் வறுமையில் தள்ளப்படுகின்றன.

அப்படி பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான கினியின் நிலைமையை நேரில் ஆராயும் பிபிசியின் காணொளி.