இந்திய பிரதமர் மோதி தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா சந்திப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது நான்கு ஆப்பிரிக்க நாட்டு சுற்றுப் பயணத்தில் இரண்டாம் நாள், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமாவை சந்தித்தார். கடந்த ஒரு தசாப்தத்தில் தென் ஆப்ரிக்கா வரும் முதல் இந்தியப் பிரதமர் மோதி ஆவார்.

பின்னர், அவர் தென் ஆப்பிரிக்காவில் பெரிய அளவில் உள்ள இந்திய சமுதாயத்தினரிடம் பேசவுள்ளார்.

ஆய்வாளர்கள், மோதி ஆப்பிரிக்காவுடனான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்த முயல்கிறார் என்றும், ஆப்பிரிக்காவில், பெரும் பொருளாதார ஆதிக்கம் கொண்டுள்ள சீனாவுடனான போட்டியில் முன்னேற முயல்கிறார் எனவும் தெரிவிக்கிறார்கள்.