மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட சமயத்தில் அதிகளவில் வெறுப்பு குற்றங்கள் பதிவானதாக தகவல்

  • 8 ஜூலை 2016
படத்தின் காப்புரிமை bbc

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய ராஜ்ஜியத்தின் நிலை குறித்து மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட சமயத்தில் பதியப்பட்ட வெறுப்பு குற்றங்களின் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்ததாக பிரிட்டனில் உள்ள தேசிய காவல் உயர் அதிகாரிகள் சபை தெரிவித்துள்ளது.

ஜூன் மாதத்தின் இரண்டாவது பாதியில் நாட்டில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான சம்பவங்கள் போலிஸிடம் பதியப்பட்டதாக சொல்லப்படுகிறது.

கடந்தாண்டு இதே காலகட்டத்தை வைத்து பார்க்கும் போது, 42% சதவீதம் அதிகரித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற முடிவெடுத்துள்ளதாக, கருத்தறியும் வாக்கெடுப்புக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மறுநாள், ஜூன் 25ஆம் தேதி தினசரி விகிதம் பதிவாகும் குற்றங்கள் அளவில் பெரிய மாற்றம் நிகழ்ந்து 289 ஆக பதிவானது.