நைஜீரியாவில் 6 இஸ்லாமியர்களை கொன்ற தற்கொலை குண்டுதாரி

  • 8 ஜூலை 2016

வடகிழக்கு நைஜீரியாவில் மசூதியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்த இஸ்லாமியர்கள் 6 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இஸ்லாமியவாத தீவிரவாத குழுவான பொக்கோ ஹரம் டம்போ நகரில் உள்ள மத்திய மசூதியைத் தாக்க திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் பலத்த பாதுகாப்பு காரணமாக அது முடியாமல் போனதாக இராணுவ பேச்சாளர் கர்னல் சானி உஸ்மான் தெரிவித்துள்ளார்.

ஒரு தீவிரவாதி தனத உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்து இறந்த நிலையில், மற்றொருவர் அந்தப் பகுதியில் இருந்த சிறிய மசூதிக்குள் சென்று தன்னுடைய சாதனத்தை வெடிக்கச் செய்து 6 பேரை கொன்றுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் கூறியுள்ளார்.