வட கொரிய ஏவுகணைகளை முறியடிக்க தென் கொரியா - அமெரிக்கா திட்டம்

  • 8 ஜூலை 2016

தென் கொரியாவுக்குள் ஏவுகணைத் தடுப்பு கேடய அமைப்பை நிர்மாணிக்க, அமெரிக்காவும், தென் கொரியாவும் ஒப்புக்கொண்டுள்ளன.

படத்தின் காப்புரிமை

வட கொரியா ஏவுகணைகளை அனுப்பினால் அவற்றைக் கண்டறிந்து அதனை சுட்டுத் தள்ள இந்தக் கேடயங்களால் முடியும்.

படத்தின் காப்புரிமை AFP

பல்வேறு அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை வட கொரியா நடத்தியதை தொடர்ந்து, ஏவுகணை தடுப்பு கேடயம் அமைப்பது தொடர்பான யோசனையை ஆய்வு செய்யும் திட்டத்தை இரு நாடுகளும் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்திருந்தன.

அந்த பகுதியில் பாதுகாப்பு அம்சத்தில் நிலையற்ற தன்மை உருவாக்கும் என காரணத்தை கூறி, அமெரிக்கா மற்றும் தென் கொரிய தூதுவர்களிடம் சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

ஏவுகணை பாதுகாப்பு கேடய அமைப்பு, தென் கொரிய எல்லையைக் கடந்து சீன எல்லைக்குள் ஊடுருவிப் பார்க்க முடியும் என்பதால் சீனா கவலை கொண்டிருப்பதாக பிபிசி கொரிய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.