2 அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது ரஷ்யா

ரஷியாவை சேர்ந்த இரண்டு அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற்றியதற்கு பதிலடியாக, கடந்த மாதம் இரண்டு அமெரிக்க தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது ரஷ்யா.

படத்தின் காப்புரிமை RIA Novosti
Image caption ஆவணப்படம்

மாஸ்கோவில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தில் வெளியே வேலை செய்யும் ரஷ்ய பாதுகாப்பு காவலருடன் ஒரு மோதல் சம்பவத்தில், வெளியேற்றப்பட்ட தூதரக அதிகாரிகளில் ஒருவர் ஈடுபட்டிருந்தார் என்று துணை வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி ரியப்கோவ் தெரிவித்தார்.

காவலரின் முகத்தில் அந்த தூதரக அதிகாரி தாக்கியதாக ரஷியா கூறியுள்ளது.

ஆனால் காவலர்தான் கோபத்தைத் தூண்டி, தூதரக அதிகாரியைத் தாக்கியதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. இரண்டு ரஷ்ய அதிகாரிகளை தாக்குதல் காரணம் காட்டி ஜூன் மாதம் அமெரிக்கா வெளியேற்றியது.

அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மீதும் அச்சுறுத்தும் பிரசாரத்தை ரஷ்யா அதிகப்படுத்திவருகிறது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.