பிரிட்டன் தொழிற்கட்சி தலைவர் பதவிக்கு ஏங்கெலா போட்டி?

  • 9 ஜூலை 2016
படத்தின் காப்புரிமை PA

பிரிட்டனின் முக்கிய எதிர்கட்சியான தொழிற் கட்சி தலைவர் ஜெரிமி கோர்பினின் எதிர்காலம் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

வரும் திங்களன்று ஜெர்மி கோர்பினுக்கு எதிராக தொழிற் கட்சியின் தலைவர் பதவிக்கு தான் போட்டியிட போவதை அறிவிக்க உள்ளதாக அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஏங்கெலா ஈகிள் தெரிவித்துள்ளார்.

கடந்த மாத இறுதியில், கோர்பினை எதிர்த்து தான் போட்டியிடப் போவதை ஏங்கெலா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

சமீபத்தில் கோர்பினுக்கு எதிரான தொழிற் கட்சி எம்.பிக்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியை தழுவினார் கோர்பின்.

ஆனால், அவர் எந்த சவாலையும் சந்திக்க தயராக இருப்பதாக கோர்பினின் பேச்சாளர் கூறியுள்ளார்.