கறுப்பினத்தவர்கள் மீது போலிஸ் தாக்குதல்: அமெரிக்காவில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

  • 9 ஜூலை 2016
படத்தின் காப்புரிமை AFP

இரு கறுப்பின நபர்கள் மீது இந்த வாரம் போலிஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அட்லாண்டா, நியு ஒர்லியன்ஸ், நியுயார்க் மற்றும் பல நகரங்களில் அமைதிப் பேரணிகள் நடைபெற்றன.

டல்லஸ் நகரில் நடந்த அமைதி பேரணி ஒன்றுக்கு போலிஸ் பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்த போது, துப்பாக்கிதாரி ஒருவர் ஐந்து போலிஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு ஒருநாள் கழித்து இந்த அமைதி பேரணிகள் நடந்து வருகின்றன.

போலிஸ் அதிகாரிகளின் மரணத்துக்கு கண்டிப்பாக துக்கம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்றாலும், கறுப்பின ஆண்களை கொல்வதற்கு முடிவுகட்டும் போராட்டங்கள் தொடர வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் ரிவரெண்ட் ஜெஸ்ஸி ஜாக்சன் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Facebook
Image caption மிகா ஜான்சன்

டல்லஸ் நகரில் போலிஸ் மீது தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரியை 25 வயதான ராணுவ அதிகாரி மிகா ஜான்சன் என அடையாளாம் கண்டுள்ளனர்.

தப்பிக்க வழியில்லாத ஜான்சனிடம் போலிஸார் வெடிகுண்டுடன் ஒரு ரோபோ இயந்திரத்தை அனுப்பி அவரை கொன்றனர்.