ஹங்கேரி தனது தென் எல்லை பகுதியை முழுமையாக சீல் வைக்க முயற்சி

குடியேறிகள் , வரமுடியாதபடி, ஹங்கேரி தனது தென் எல்லைப் பகுதியை முழுமையாக சீல் வைக்க முயல்வதை ஐ.நா.வின் அகதிகள் முகமை விமர்சித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஆவணப்படம்

ஹங்கேரி அரசு 10 ஆயிரம் காவல்துறை அதிகாரிகளையும், படைவீரர்களையும் செர்பிய எல்லை அருகில் நிறுத்திவைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஐ.நா.மனிதஉரிமைகள் ஆணையம், சட்டவிரோதமாக ஹங்கேரிக்குள் நுழைபவர்கள், வலுக்கட்டாயமாக செர்பியாவுக்குத் திருப்பியனுப்பும் நடைமுறை கவலை அளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளது.

செர்பியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் நிலவும் மோசமான நிலையை ஐ.நா விமர்சித்துள்ளது.

பால்கன் வழியாக பயணம் செய்யும் குடியேறிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

வெள்ளியன்று, செர்பிய அரசு அவசர நிலையை பற்றி விவாதிக்க கூட்டத்தை நடத்தியது.