மொசூல் நகரில் விமான தளத்தை மீட்டது இராக் ராணுவம்

  • 9 ஜூலை 2016
படத்தின் காப்புரிமை Reuters

இராக்கில் ஐ.எஸ் போராளி குழுவின் முக்கிய தளமாக விளங்கிய மொசூல் நகரின் தெற்கு பகுதியில் இருந்த விமானத்தளம் ஒன்றை அதிரடியாக தாக்கியதாக இராக் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொய்யராஹ் விமான தளத்தை அரசு படைகள் தாக்கிய போது சிறிய எதிர்ப்புகளை சந்தித்ததாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

மொசூல் நகரில் ஐ.எஸ் போராளிகள் மீது பெரிய தாக்குதல்களை நிகழ்த்தி வரும் அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு படைகளுக்கு, இந்த விமானத்தளத்தை கைப்பற்றியதன் மூலம் போருக்கு தேவையான படையினர் மற்றும் ஆயுதங்களை கொண்டுவரும் முக்கியத் தளமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விமானத்தளத்தை இழப்பதன் மூலம் இராக்கில் ஐ.எஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மற்றும் மொசூல் இடையே உள்ள முக்கியமான விநியோக பாதை துண்டிக்கப்பட்டுள்ளது.