தெற்கு சூடானில் ராணுவ பிரிவுகளுக்குள் நடந்த மோதலில் நுற்றுக்கணக்காண படைவீரர்கள் பலி

  • 9 ஜூலை 2016

தெற்கு சூடான் நகரான ஜூபாவில் போட்டி ராணுவ பிரிவுகளுக்கு இடையில் நடந்த மோதல் காரணமாக நுற்றுக்கணக்காண படைவீரர்கள், கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை GETTY

இறந்தவர்கள் குறித்து இன்னும் அதிகாரப் பூர்வமான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.

கடந்த வியாழக்கிழமை தொடங்கிய மோதல்கள் சனிக்கிழமை அதிகாலை வரை தொடர்ந்தது.

படத்தின் காப்புரிமை Getty

ஒரு பத்திரிகையாளர் கூறுகையில், படை வீரர்கள் சாலைகளில் தடுப்புகளை வைத்துள்ளனர்.

சந்தைகள் மீண்டும் திறந்துள்ள ஆனால் மக்கள் பலர் வீடுகளுக்குள்ளேயே இருப்பதாக தெரிவித்தார்.

தெருக்களில் அதிக அளவில் ராணுவத்தின் இருப்பு உள்ளது. வெகு சில மக்களே வெளியில் வருகிறார்கள்.

ஒரு மருத்துவர் பேசும்போது, பல உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுகின்றன என்றும் சவக்கிடங்கு நிரம்பிவிட்டது என்றும் கூறினார்.

இந்த மோதலானது - அதிபர் சல்வா மற்றும் அவரது முன்னாள் எதிராளியான துணை அதிபர் ரெய்க் மச்சரின் ஆதரவாளர்கள் இடையில் ஆரம்பித்தது.

தெற்கு சூடான் விடுதலை அடைந்த தனது ஐந்தாவது ஆண்டை நெருங்கிவிட்டது. ஆனால் எந்த கொண்டாட்டங்களும் நடத்தப்படவில்லை.