தெற்கு சூடானின் அதிபர் மற்றும் துணை அதிபரின் விசுவாச படையினர் இடையே கடும் மோதல்

  • 10 ஜூலை 2016

தெற்கு சூடான் தலைநகரான ஜூபாவில் அதிபர் சல்வா கீர் மற்றும் துணை அதிபர் ரெய்க் மச்சர் ஆகியோருக்கு விசுவாசமான படையினர் இடையே மிகக் கடுமையான சண்டை நடந்து வருகிறது.

தங்களது ராணுவ முகாம்கள் மீது அரசு படையினர் தாக்குதல் நடத்தி உள்ளதாக மச்சர் ஆதரவு பெற்ற படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் தாங்களும் தாக்கப்பட்டுள்ளதாக ஐ.நா முகாம்களுக்கு அருகே வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையத்திற்கு அருகிலும் மோதல்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

தெற்கு சூடானில் இரு ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர அமைதி உடன்படிக்கை ஒன்றை அமல்படுத்துவதில் இரு தரப்பினரும் போதிய அக்கறை காட்டவில்லை என்று ஐ.நா விமர்சித்துள்ளது.

அந்த உடன்படிக்கையின்படி, ரெய்க் மச்சரின் முன்னாள் போராளிகளில் சிலர் ஜூபாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

அரசாங்க பதவிகளில் அவர்கள் இன்னும் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.