சிரியாவில் அலெப்போ நகரை மீட்க அரசு படைகள் தீவிர தாக்குதல்: 29 போராளிகள் பலி

  • 10 ஜூலை 2016
படத்தின் காப்புரிமை Reuters

சிரியாவில் அரசு படைகளால் முற்றுகைக்கு உள்ளாகி இருக்கும் அலெப்போ நகரில் நடந்த கடும் சண்டையில் குறைந்தது 29 போராளிகள் கொல்லப்பட்டிருப்பதாக சிரியாவில் நடந்துவரும் போரை கண்காணிக்கும் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

கடந்த வியாழன் அன்று துண்டிக்கப்பட்ட முக்கிய விநியோக பாதையை மீண்டும் திறக்கும் முயற்சியில் இரு இஸ்லாமியவாத பிரிவுகளை சேர்ந்த போராளிகள் இரண்டு கார் குண்டு தாக்குதல்களை தொடர்ந்து, அரசு படையினர் மீது எதிர் தாக்குதலை தொடுத்ததாக பிரிட்டனை சார்ந்த மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

இச்சூழலில், அரசு படைகள் அலெப்போ நகரில் முன்னேறி வருவதாகவும், தீவிரவாத குழுக்களுக்கு கடுமையான நெருக்கடியை தருவதாகவும் சிரிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.