பிரிட்டனின் அடுத்த பிரதமராக தெரஸா மே அறிவிக்கப்பட உள்ளார்

  • 11 ஜூலை 2016
படத்தின் காப்புரிமை PA Wire
Image caption தெரஸா மே மற்றும் ஆண்ட்ரியா லீட்சும்

இன்னும் சில மணி நேரங்களில் அல்லது வரக்கூடிய நாட்களில் பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், நாட்டின் பிரதமராகவும் உள்துறை அமைச்சர் தெரஸா மே அறிவிக்கப்பட உள்ளார்.

தெரஸா மேவை எதிர்த்து களத்தில் நின்ற எரி சக்தி அமைச்சர் ஆண்ட்ரியா லெட்சம் இந்த போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு புதிய தலைவர் மிக அவசரமாக நியமிக்கப்பட வேண்டும் என்ற தேசிய நலனுக்காக இந்தப் போட்டியிலிருந்து விலகுவதாக ஆண்ட்ரியா லெட்சம் தெரிவித்துள்ளார்.

இச்சூழலில், பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமர் தெரஸா மே என்பதை உறுதிப்படுத்த கன்சர்வேட்டிவ் கட்சியானது ஆலோசனை நடத்தி வருகின்றது.

இதே வேளை, பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழிற் கட்சியில் அதன் தலைவர் ஜெரிமி கோர்பினை அப்பதவியிலிருந்து அகற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஏங்கெலா ஈகிள் அதிகாரப்பூர்வ முயற்சிகளை தொடங்கியுள்ளார்.