ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான போருக்கு உதவ இராக்கிற்கு மேலும் படையினர்: அமெரிக்க பாதுகாப்பு செயலர்

ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான இராக்கின் போருக்கு உதவும் வகையில் அமெரிக்கா மேலும் 560 படையினரை அனுப்பவுள்ளது.

படத்தின் காப்புரிமை ap

பாக்தாத்திற்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஆஷ் கார்ட்டர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இஸ்லாமிய அரசு அமைப்புக்கு எதிரான நடவடிக்கையின் கவனம், நாட்டின் வட பகுதியில் உள்ள, அதன் கோட்டையான மொசூலின் நகரை நோக்கித் திரும்புகையில், அவரது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு அரசு படைகள் ஐ.எஸ் வசமிருந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கய்யாரா விமான தளத்தை திரும்ப கைப்பற்றின..

அது மொசூல் நகரை திரும்ப கைப்பற்ற பயன்படும் மையங்களில் ஒன்றாக செயல்படும் என கார்ட்டர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்கான தளவாட ஆதரவுகளை அமெரிக்கர்கள் வழங்குவார்கள் எனவும் கார்ட்டர் தெரிவித்துள்ளார்.