ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜப்பான்: ஆளும்கட்சியின் அமோக வெற்றி உலக அமைதிக்கு ஆபத்தா?

ஜப்பானின் நாடாளுமன்றத்தேர்தலில் ஆளும் கூட்டணி மிகப்பெரும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.

இரண்டாவது உலகப்போரில் தோல்வியடைந்த தரப்பிலிருந்த ஜப்பான் மீதான அமெரிக்க நிர்ப்பந்தம் காரணமாக, போருக்கு எதிரான சமாதானப்பிரிவொன்று புதிதாக ஜப்பானின் அரசியல் சட்டத்திருத்தமாக சேர்க்கப்பட்டது.

அந்த சட்டத்திருத்தத்தை மாற்றவேண்டும் என்று கூறிவரும் ஜப்பானிய பிரதமருக்கு இந்த தேர்தல் வெற்றி அதற்கானதொரு வாய்ப்பை தந்திருப்பதாக கருதப்படுகிறது.

தனது பிராந்தியத்தில் சீனாவின் வல்லமை அதிகரிக்கும் சூழலில், ஜப்பானின் இராணுவ பங்கு அதிகரிக்கவேண்டுமென ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே விரும்புகிறார்.

ஆனால் இடதுசாரிகள் இதை கடுமையாக எதிர்க்கிறார்கள்.

அவர்களின் எதிர்ப்பையும் மீறி அபே விரும்பிய பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்திலான தேர்தல் வெற்றி அவருக்கு இந்த தேர்தலில் கிடைத்திருக்கிறது.

இதன் அடுத்த கட்டமாக ஜப்பானின் அரசியல் சட்டத்திலுள்ள சமாதான பிரிவை நீக்கலாமா என்பதற்கான பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஏனெனில் எழுபதாண்டு பழமையான அந்த சட்டப்பிரிவை யாரும் நினைத்தவுடன் நீக்க முடியாது.

தனது நாட்டின் இராணுவ வல்லமையை அதிரித்துக்காட்ட விரும்பும் அபே அதற்குத்தடையாக பார்க்கப்படும் இந்த குறிப்பிட்ட அரசியல் சட்டப்பிர்வை நீக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பார் என்று பார்க்கப்படுகிறது.

உலகம் முழுக்க இடதுசாரி மற்றும் வலதுசாரி வாக்காளர்கள் அரச கட்டமைப்புக்கு எதிரான அரசியல் தலைவர்களையே ஆதரித்து வருகிறார்கள்.

ஆனால், ஜப்பானிலோ அவர்கள் ஆளும் கட்சியை வலுப்படுத்தியிருக்கிறார்கள். அதன் தாக்கம் ஜப்பான் அரசியலைத்தாண்டி உலக அளவிலும் எதிரொலிக்கக்கூடும்.