அலெப்போ நகரில் கடும் சண்டை: நகரை மீட்க அரசு படைகள் தீவிரம்

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கோப்பு படம்

சிரியா அரசு பிடியில் இருக்கும் பிரிக்கப்பட்ட அலெப்போ நகரின் மேற்கு பகுதியில், அங்கு உள்ள போராளிகளின் அமைப்புகள் சுமார் 300 குண்டுகளை வீசியுள்ளதாக சிரியா ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களில் அரசு படைகள் அதிகபடியான வான் வழித் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தனர்

இரண்டு தரப்பிலும் பொது மக்களின் உயிரிழப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதியில், நகருக்கு செல்வதற்கான ஒரே வழியை திரும்ப திறக்கும் முயற்சி தடைப்பட்டதையடுத்து போராளிகளின் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.