பாக்தாத்தின் முக்கிய வீதிகள் மூடல்: கடும் போக்குவரத்து நெரிசல்

இராக் தலைநகர் பாக்தாத்தின் முக்கிய வீதிகள் ராணுவத்தினரால் மூடப்பட்டுள்ளதால் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நகரத்தின் உள்ளேயும் அதனை சுற்றியும் நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் நெரிசலில் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், அதில் சிலர் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு, தங்கள் அலுவலகங்களுக்கு கொளுத்தும் வெயிலில் நடந்து செல்வதாகவும் குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.

ஃபலூஜா நகர், மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய நகரமான மொசூலுக்கு தென்பகுதியில் உள்ள கய்யாரா விமான தளம் ஆகிய பகுதிகளில் ஐ.எஸ்ஸுக்கு எதிரான தங்களின் வெற்றியைக் கொண்டாடும் பேரணியின் தயாரிப்புகளுக்காக இவ்வாறு முக்கிய வீதிகள் மூடப்பட்டுள்ளதாக ராணுவ செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.