ஆப்கான் அதிபரை சந்திக்கவிருக்கும் ஆஷ் கார்டர்

  • 12 ஜூலை 2016

அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஆஷ் கார்டர் திடீர் பயணமாக ஆப்கானிஸ்தான் வந்தடைந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AP

ஆப்கான் அதிபர் அஷ்ரஃப் கனி, மூத்த ஆப்கான் தலைவர்கள் மற்றும் அமெரிக்க ராணுவ தளபதிகளை கார்டர் சந்திக்க உள்ளார்.

கடந்த வாரம் அதிபர் ஒபாமா, ஆப்கனில் ராணுவத்தை திரும்பப் பெறுவது தாமதப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்; ஆப்கன் படைகளுக்கு அடுத்த வருடம்வரை பயிற்சிகள் மற்றும் ஆதரவுகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று சனிக்கிழமை அன்று நேடோ உறுதியளித்துள்ளது.

தீவிரமாக செயல்படும் தாலிபான்களிடமிருந்து ஆப்கன் அச்சுறுத்தல்களை சந்தித்து வருகிறது.

அல் கய்தா மற்றும் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பிடமிருந்தும் அச்சுறுத்தல்கள் வரும் என நேட்டோ தளபதிகள் எச்சரித்துள்ளனர்.