கொல்லப்பட்ட டல்லஸ் போலிஸாரின் குடும்பத்தினரை சந்திக்கிறார் ஒபாமா

அமெரிக்காவின் டல்லஸ் நகரத்தில், துப்பாக்கித் தாக்குதலில் ஐந்து போலிஸார் கொல்லப்பட்டதையடுத்து அதிபர் ஒபாமா வரும் செவ்வாய்கிழமையன்று அங்கு விஜயம் செய்ய உள்ளார்.

படத்தின் காப்புரிமை GETTY IMAGES

அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி, அனைத்து மதங்களைச் சார்ந்தவர்கள் பங்கேற்கும் நினைவு கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்கு முன்னதாக கொல்லப்பட்ட போலிஸாரின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு கொல்லப்பட்ட துப்பாக்கிதாரி சமீபத்தில் அமெரிக்காவின் பிற இடங்களில் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு பழிவாங்கவே இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.

உயிரிழந்த ஐந்து போலிஸாரின் நினைவாக திங்கட்கிழமை மாலை டல்லஸில் உள்ள ஸிட்டி ஹாலின் வெளியே ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது.

டல்லஸ் போலிஸ்சஙற்க தலைவர் ரான் பிக்ஸ்டன், அவர்கள் அனைவரும் மற்றவர்களை காக்க ஆபத்தை நோக்கி சென்ற ஹீரோக்கள் என்று விவரித்துள்ளார்.