விண் முட்டும் கட்டிடங்களிடையே விழும் சூரியன் - மன்ஹாட்டன் காட்சி

ஒவ்வொரு ஆண்டும், சோல்ஸ்டைஸ், (அதாவது, உத்தராயனம் அல்லது தக்ஷிணாயனம்) என்றழைக்கப்படும் நாட்களில், இங்கிலாந்தின் ஸ்டோன்ஹெஞ்ச் என்ற இடத்தில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழந்தவர்கள் கட்டிய செங்குத்தான கல் வரிசைக்கிடையே சூரியன் அந்த வட்டவடிவ அமைப்புக்குள் இணைந்து பொருந்தித் தோன்றும் காட்சியைப் பார்க்க ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள்.

Image caption நியுயார்க் நகரில் ஒரு அபூர்வ சூரிய அஸ்தமனம்

அது போல நியுயார்க் நகரிலும் சூரியனின் கதிர்கள் ஒரு பெருநகர சூரிய நிகழ்வை நியூயார்க்வாசிகள் கண்டிருக்கிறார்கள்.

அங்கு நகரிலுள்ள அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கிடையே சரியாக் பொருந்தி சூரியன் அஸ்தமிப்பதை பல புகைப்பட ஆர்வலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் தங்கள் காமெரா முக்காலிகளை நிறுத்தி, படமெடுத்திருக்கிறார்கள்.

இந்த நிகழ்வின்போது, சூரியன், நியுயார்க்கின் வானுயர்ந்த கட்டிடங்களின் இடையே அழகாக இறங்கிவருவது போலத் தோற்றமளித்து , மான்ஹாட்டனின் இந்த வீதியின் இரு புறங்களையும் ஒளிரவைக்கிறது.

விண்ணியல் பௌதிக விஞ்ஞானி , நீல் டெக்ராஸ் டைஸன், இந்த நிகழ்வுக்கு 1996ல் மான்ஹாட்டன்ஹெஞ்ச் என்று பெயரிட்டார் – இங்கிலாந்தின் ஸ்டோன்ஹெஞ்சில் ஏற்படும் சூரிய நிகழ்வைப் போலவே இது இருப்பதால்.